வீடு வாங்கும் போது சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்

Spread the love

விற்பனை நிலம் நமக்கு தேவைதானா?

பார்க்க வேண்டிய ஆவணங்கள்

வீடு வாங்கும் போது சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் சரிபார்க்க வேண்டியவைகள் ஆகியவற்றை இங்கு பார்ப்போம்.

காலி நிலமோ அல்லது கட்டிடமோ வாங்குவதாக இருந்தால் முக்கியமாக பார்க்க வேண்டியவைகள்.

காலி நிலம் அல்லது வீட்டோடு கூடிய நிலத்தின் சர்வே நெம்பர், உட்பிரிவு நெம்பர் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் நிலத்தின் புதிய நில வரைபடம் FMP , பட்டா, அ பதிவேடு மற்றும் வில்லங்க சான்று ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

நில வரைபடம் அல்லது சொத்து வரைபடம் சரிபார்த்தல்

நில வரைபடம் மூலம் நீங்கள் வாங்கும் இடத்தின் எல்லைகள் மற்றும் எல்லை நீள அகலங்கள் சரியாக இருகிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். சில நேரங்களில் புலப்படத்தில் உள்ளதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.

நில உரிமை சரிபார்த்தல்

  1. பட்டாவில் உள்ள பெயரும் தற்போது விற்பவரின் பெயரும் ஒன்றாக உள்ளதா என்பதை பார்க்கவேண்டும்.
  2. அ பதிவேட்டில் உள்ள பெயர் மற்றும் நிலத்தின் விவரங்களை சரிபார்க்கவும்

பட்டா வகைகள் மற்றும் அதன் தேவைகள்

விவசாய நிலமா அல்லது வீட்டு மனையா

விற்பனைக்கு வரும் நிலம் பட்டா மற்றும் அ-பதிவேடு மூலம் அது விவசாய நிலமா அல்லது நத்தம் நிலமா அல்லது லே அவுட்- மனைப்பிரிவா என பார்க்க வேண்டும்.

தனிப்பட்டாவா கூட்டு பட்டாவா/ கூட்டு சொத்தா

பட்டாவானது விற்பவரின் தனிப்பட்டாவா அல்லது கூட்டு பட்டாவா என்பதை சரிபார்க்கவும்.

  1. தனிப்பட்டா என்றால் விற்பவரின் பெயர் மட்டுமே இருக்கும். இதனால் அவர் மற்றும் அவருடைய வாரிசு மட்டுமே அந்த நிலத்திற்கு சொந்தக்காரர் ஆவார்.
  2. பட்டாவில் விற்பவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருந்தால் அது கூட்டு பட்டாவாகும். இதனால் அந்த பெயர்களில் உள்ள அனைவருக்கும் மற்றும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் அதில் உரிமை உள்ளது. எனவே அவர்கள் அனைவருடைய ஒப்புதலும் தேவை,

நிலத்தின் வகைபாடு: என்னவகை நிலம்

விற்பனைக்கு வரும் நிலமானது எந்தவகை நிலம் அது நமக்கு பயன்படுமா என்பதை பார்க்கவேண்டும். நிலதின் வகைபாடுகள் கீழே,

  • நன்செய் நிலம்
  • புன்செய் நிலம்
  • மேய்ச்சல் நிலம்
  • நத்தம் புறம்போக்கு நிலம்
  • ஓடை புறம்போக்கு
  • வாய்க்கால் புறம்போக்கு நிலம்
  • கோவிலுக்கு வழங்கிய நிலம்
  • விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலம்
  • பூங்கா ,பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலம்

விற்பனைக்கு வரும் நிலத்தின் பட்டா எந்த வகையான் பட்டா என சரிபார்த்து அதில் மறு விற்பனை செய்ய முடியாத பட்டாவா என பார்க்க வேண்டும்.

வில்லங்க சான்றிதல் சரிபார்ப்பு

விலைக்கு வரும் நிலத்திற்கு வில்லங்க சான்று EC போட்டு பார்க்க வேண்டும். மேலும் அந்த ஏரியாவிற்கு எந்த வருடம் முதல் ஆன்லைன் EC கிடைகிறது என்று பார்க்க வேண்டும். ஆன்லைனில் கிடைக்கும் காலத்திற்கு EC வரவில்லை, தகவல்கள் இல்லை என்றால் அதற்கு முந்தய காலத்திற்கு Manual EC எடுக்க வேண்டும்.

வில்லங்க சான்றில் அந்த நிலத்தின் சர்வே நெம்பரில் கடைசியாக யார் எவருக்கு பத்திர பதிவு, தான செட்டில்மெண்ட், விற்பனை பதிவு, வங்கி அடமானம் செய்யப்பட்டது போன்ற விவரங்கள் தேதி மற்றும் பத்திர பதிவு வரிசை எண், விற்பனை செய்தவர், வாங்கியவர் விவரங்கள் இருக்கும். இதில் விற்பனைக்கு உள்ள நிலத்தின் சர்வே நெம்மர் உள்ள விவரங்களை சரி பார்க்கவேண்டும்.

EC யில் SRO- சப் ரிஜிஸ்டர் மூலம் ரத்து செய்யப்பட்டதா, செட்டில்மெண்ட் பத்திரம், அடமானம் திரும்பப்பட்டதா என சரிபார்க்க வேண்டும்.

விற்பனை நிலத்தின் மீது யாராஅவது பத்திரப்பதிவு கூடாது என மனு கொடுத்து இருக்கிறார்களா என சரிபார்த்தல்

Double Document Land- Power OP Attorny (POA) நிலம்

POA அக்ரிமெண்ட் நகல் வாங்கி படித்து பார்க்க வேண்டும். அந்த பத்திரம் செல்லக்கூடியதா என்பதை பவர் பத்திரம் எழுதி கொடுத்தவர் உயிருடன் உள்ளாரா, சுய நினைவுடன் உள்ளாரா? மேலும் அதை அவர் ரத்து செய்து விட்டாரா என்று பார்க்க வேண்டும்.

உயில் மூலம் உள்ள பத்திரம் வாங்கலாமா

உயில் மூலமக ஒரு நிலம் விற்பனைக்கு வருகிறது எனில் அந்த உயிலானது கடைசி உயில் அல்லது இறுதி உயில் என்றா என்று பார்க்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட உயில் மூலம் விற்பனை செய்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம். பதிவு செய்யப்பட்ட உயில் எனில் பதிவுசெய்யப்பட்ட உயிலுக்குப்பிறகு ஏதேனு,ம் உயில் உள்ளதா என உறவினர்களிடம் தெரிந்து கொள்ளவேண்டும்.

பதிவு செய்யப்படாத உயில் எனில் அது இரட்டை டாக்குமெண்ட் ஆகும்.

வண்டிப்பாதை பொதுப்பாதை உள்ளதா?

விற்பனைக்கு வரும் நிலத்திற்கு போய்வர சரியான பாதை உள்ளதா, அல்லது மாமூல் பாதையா, இல்லை பாதையே இல்லாத அடைக்கப்பட்ட நிலமா என சரிபார்க்க வேண்டும்.

இறுதியாக பட்டா சிட்டா, வில்லங்க சான்று, பத்திர நகல் போன்றவற்றை வைத்துக் கொண்டு ஒரு நம்பிக்கையான லாயருடன் கலந்து ஆலோசிக்கவும்.

பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

Admin
you can add comment first

      Leave a Reply

      House Guides
      Logo
      Register New Account