நில வரைபடம் fmb, ஆன்லைனில் புலப்படம், சொத்து வரைப்படம் FMP ஆன்லைனில் பெறுவது எப்படி
புலப்படம், சொத்து வரைப்படம் ஆன்லைனில் பெறுவது எப்படி
புலப்படம் FMP என்றால் என்ன?
ஒருவருடைய நிலத்தின் இருப்பிடம் மற்றும் எல்லைகள் சொத்து விவர சர்வே நெம்பர், உட்பிரிவு சர்வே நெம்பர் போன்ற விவரங்களடங்கிய வரைப்பட தொகுப்பு புலப்படம் FMP என்று அழைக்கப்படுகிறது. இதை புலப்படம், நிலப்படம், நில வரைப்படம், நில அளவீட்டு புத்தகம், நில உரிமைப்படம், FMP ஸ்கெட்ச் என்றும் அழைக்கப்படும். இது நில அளவையர் மூலம் அளந்து வரையப்படும்
நிலத்தின் சர்வே நெம்பர், உட்பிரிவு நெம்பர், வீடு, கிணறு நடைபாதை, நீர் செல்லும் பாதைகள், மற்றும் நிலத்தில் அமைந்துள்ள கட்டிடங்கள் போன்ற விவரங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். ஒருவருடை நிலத்தின் அனைத்துப் பக்க எல்லைக்கோடுகள் எல்லை நீள அளவுகள் உள்ளது. நிலத்தின் எல்லைக்கு அப்பால் மறுபுறம் உள்ள நிலத்தின் சர்வே நெம்பர்கள் குறிக்கப்பட்டு இருக்கும்.
நிலவரைபடம் வகைகள்
நகர புல வரைபடம், கிராம புல வரைபடம், சர்வே எண் வரைப்படம் மற்றும் உட்பிரிவு வரைப்படம் என்ற வகைகளில் இதை பெறலாம்.
நில வரைபடம் பார்ப்பது எப்படி
ஒருவருடைய நிலம் வீடு போன்ற சொத்துகளின் நில வரைபடத்தை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்யும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
- சரியான அரசு இனையத்தளத்திற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html செல்லவேண்டும்.
- இந்த பக்கத்தில் உள்ள ‘புலப்பட விவரங்களை பார்வையிட-கிராமம்’ அல்லது ‘FMP Sketch-Rural’ என்ற இணைப்பை தேர்தெடுக்கவும்.
- இதில் தங்கள்மாவட்டம், வட்டம் மற்றும் கிராம பகுதியை தேர்ந்தெடுத்து சர்வே நெம்பர் மற்றும் உட்பிரிவுகளை எழுதி சமர்பிக்க வேண்டும்.
- அடுத்து View FMP என தொன்றும். இதை திறந்தால் கிராம நில வரைபடம் கிடைக்கும். இதை டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இதே போல் நகர நில அளவை வரைபடம் எடுத்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் புல வரைப்படம் பெற லிங்க்