பட்டா என்றால் என்ன? 15 பட்டா வகைகள், பட்டாவின் தேவைகள், பட்டா எப்படி பெறுவது?
Table of Contents
பட்டா சிட்டா என்றால் என்ன
பட்டா என்பது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமையை சட்டரீதியாக நிரூபிக்க உதவும் ஆவணம் ஆகும். பட்டா என்பது வருவாய் துறையினரால் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும் பதிவு செய்யப்பட்ட சொத்தின் ஆவணம் ஆகும்.
பட்டா சிட்டா வேறுபாடுகள்
பட்டா என்பது நிலத்தின் உரிமையை காட்டும் ஆவணம் ஆகும். சிட்டா என்பது ஒரு வருவாய் ஆவணம் ஆகும். சிட்டாவில் நிலத்தின் விவரங்கள் மற்றும் அரசுக்கு செழுத்தவேண்டிய வருவாய் வரி விவரங்கள் அடங்கி இருக்கும்.
பட்டா வகைகள்
நில ஒப்படைப்பு பட்டா Assignment Land
அரசு நிலங்களை வீடு நிலம் மனை இல்லாத ஏழை மக்கள், முன்னால் இரானுவத்தினர் போன்றோருக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த அளவு பணம் பெற்றுக்கொண்டோ பட்டா வழங்கும். இதை நில ஒப்படைப்பு பட்டா என்பர். இதை குறிப்பிட்ட காலத்திற்கு மற்றவருக்கு விற்க கூடாது என்பது போன்ற கன்டிசன்கள் இருக்கும்.
ஏடி கண்டிசன் பட்டா- AD Assignment Land(Adi Dravidar)
உபரியாக இருக்கும் நிலத்தை மனைகளாக பிரித்து நிலமில்லாத பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படுவது ஏடி கண்டிசன் பட்டா எனப்படும். இந்த கண்டிசன் பட்டாவில் உள்ள நிலத்தை குப்பிட்ட காலத்திற்கு யாருக்கும் விற்க கூடாது போன்ற கண்டிசங்கள் இருக்கும். இதில் பட்டா பெறுபவரின் புகைப்படமும் தனி வட்டாசிரியரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்கும். இது மேனுவல் பட்டாவாக இருக்கும். இதில் பெண்களின் பெயரில்தான் பட்டா வழங்கப்படும். மேலும் விவசாயம் செய்வதற்கு நிலமில்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒதுக்கப்படும்.
நத்தம் நிலம்
நத்தம் என்றால் குடியிருப்பு ஆகும். அரசு புறம்போக்கு நிலத்தில் வாழும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு , தாங்கள் வாழும் கிராமத்தில் வழங்கப்படுவது நத்தம் நிலமாகும். இத்தகைய நத்தம் குடியிருப்பு முறையானது வெள்ளைக்காரன் காலத்திலேயே வகைப்படுத்தப்பட்டது. இதனால் நத்தம் நிலம் பழமையான் ஊர்களில் அமைந்து இருக்கும். நத்தம் நிலத்திற்குதான் தோராய பட்டா மற்றும் தூய பட்டா வழங்கப்பட்டது.
தோராய பட்டா
நத்தம் நிலத்தில் உள்ள குடியிருப்புகள் வீடுகள் பாதைகள் தெருக்கள் முக்கிய சாலைகள் நீர் நிலைகள் போன்றவற்றை சர்வே செய்து அந்த நிலத்தில் உள்ளவர்களுக்கு தனித்தனி சர்வே நெம்பர் கொடுத்து சில பிழைகள் அல்லது குறைகள் மற்றும் திருத்தம் செய்யத்தக்க தோராயமான பட்டா வழங்கப்படும். ஒரு குருப்பிட்ட காலத்திற்கு இதில் உள்ள குறைகள் சரிசெய்வதற்கு தற்காலிகமாக கொடுக்கப்படும் பட்டாவாகும்.
தூய பட்டா
நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு முதலில் தோராய பட்டா வழங்கப்படும். தோராய பட்டாவில் உள்ள குறைகள் பிழைகள் தகவல்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் அவர்களுக்கு நத்தம் நிலம் தூய பட்டாவாக கொடுக்கப்படும். நத்தம் தூய பட்டாவின் முன்புறம் நிலத்தின் உரிமைபற்றிய ஆவணத்தகவல்கள் இருக்கும், பின்புறம் நிலத்தின் வரைபடம் இருக்கும். இது ஒரு மேனுவல் பட்டாவாகும்.
TSLR பட்டா Town Survey Land Record
கிராம விவசாய நிலத்தை பட்டா என்ற ஆவணம் மூலம் பெறப்படுகிறது. கிராமபுற விவசாய நிலத்தை தவிர நகரத்தில் உள்ள நிலத்தின் அளவு மற்றும் பதிவு ஆவணம் பற்றிய விவரக்குறிப்புகள் உள்ள TSLR Town Survey Land Record மூலம் பட்டாவாக கொடுக்கப்படுகிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நிலங்களை துல்லியமாக சர்வே செய்து அங்கு குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும். TSLR பட்டா எடுக்க நகரம் பிளாக் மற்றும் வார்டு போன்ற பிரிவுகளில் இருக்கும்.
UDR பட்டா UDR- Updating Data Registry
தமிழ்நாடு முழுவதும் உள்ள நத்தம் நிலத்தை தவிர முறைப்படுத்தாத நிலங்கள், முறையான ஆவணங்கள் பூமி நிலங்கள், சரியாக வரையரை செய்யாத நிலங்கள் அனைத்தையும் நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி, சர்வே செய்து முறையாக ஆவணப்படுத்தி கணிணி மயமாக்கப்பட்டது. இந்த கணிணிமயமாக்கும் வேலை 1979 முதல் 1989 வரை சுமார் 10 வருடங்களாக இந்த பட்டா தரவுகள் புதிபிக்கப்பட்டது. இன்று நாம் ஆன்லைனில் பார்க்க உள்ள பட்டா ஆவணங்கள் இதன் அடிப்படையிலேயே உள்ளது.
2C பட்டா- மர பட்டா – தூசு பட்டா
அரசு நிலத்தில் உள்ள புளியமரங்கள், பனை மரங்கள் போன்ற கனிதரும் மரங்களை பராமரிக்கவும் அவற்றை அனுபவிக்கவும் ஒருவருக்கு உரிமையளித்து பட்டா வழங்கப்படும். இதுவே 2C பட்டாவாகும். 2C பட்டாவானது 2ம் நெம்பர் கிராம கணக்கு புத்தகத்தில் C பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும். இதுவே 2C பட்டாவாகும். இதை மர பட்டா எனவும் அழைக்கப்படும். மேலும் இதை பேச்சு வழக்கில் தூசு பட்டா எனவும் அழைப்பர்.
F பட்டா
ஒரு காலத்தில் ஒரு சில குடும்பங்களே அளவுக்கு அதிகமான விவசாய நிலங்களை வைத்து இருந்தனர். இவர்கள் அசைக்க முடியாத நில ஜமீன்தாரர்களாக வாழ்ந்து வந்தனர். பின்னர் இந்த ஜமீன் பரம்பரை நிலங்கள் ஜமீன் ஒழிப்பு மூலம் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அரசின் நில சீர்திருத்த துறை மூலம் பயனாளிகளுக்கு F பட்டா என்ற பெயரில் வழங்கப்பட்டது.
TKT பட்டா
TKT பட்டா என்பது ஆந்திரா மாநிலத்தில் நிலமற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச நில பட்டாவாகும். இதை விற்கவோ வாங்கவோ முடியாது.
D பட்டா
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஆந்தராவில் வழங்கப்படும் பட்டா D paddaavaakum.
B Memo பட்டா
B Memo பட்டா என்பது நில உரிமைக்கான பட்டாவே இல்லை. அரசின் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற மெமோ நோட்டீஸ் என்ற பெயரே B Memo பட்டாவாகும். இந்த மெமோ உள்ள நிலத்தை அரசு எப்போது வேண்டுமானாலும் காலி செய்ய இயலும்.
தனிப்பட்டா
தனிப்பட்டா என்பது நிலம் முழுவதும் தனிப்பட்ட நபர் ஒருவர் பெயரிலேயே இருக்கும். இந்த பட்டாவில் சர்வே நெம்பர் உட்பிரிவு நெம்பர் ஆகியவை தனியாக இருக்கும். தனிப்பட்டா நில உரிமை ஆவணத்தின் தன்மையில் தனியொருவருக்கு பத்தியப்பட்டதாகும். இதில் பட்டா நெம்பர், சர்வே நெம்பர்,உட்பிரிவு, நிலத்தின் அளவு, FMP வரைபடம் ஆகியவை தெளிவாக இருக்கும்.
கூட்டு பட்டா
கூட்டு பட்டாவில் ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்கள் இருப்பார்கள். ஆனால் யார் யாருக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரியாது. யார் நிலம் எங்கு உள்ளது என்று தெரியாது. ஒருவருக்கு அதிகமாகவோ மற்றவர்கள் குறைந்த அளவிலோ நிலம் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பட்டாவே இருக்கு. அனைவர் பட்டாவிலும் அனைவர் பெயரும் இருக்கும். உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கிய பட்டா கூட்டு பட்டாவாகும்.
Manual பட்டா
மேனுவல் பட்டாவானது புதுப்பிக்கப்படாத பழைய பட்டாவாகும். இந்த பட்டா வைத்து இருக்கும் அல்லது பட்டாவே இல்லாமல் பூர்வீககமாக குடியிருப்பவர்கள் தான் பயன் படுத்தும் நிலத்தின் உரிமையான பட்டா தாத்தா பாட்டன் பூட்டன் பங்காளி உறவினர் என்று பெயர் மாற்றாமல் அல்லது வாரிசு என்ற உரிமையில் பெயரை கூட சேர்த்தாமல் இருக்கின்றனர்.
பட்டாவே இல்லாமல் இருப்பதை விட கூட்டு பட்டாவாக இருப்பது சந்தோசம். கூட்டு பட்டாவை விட தனிப்பட்டாவாக இருப்பதே சிறப்பு. தனிப்பட்டாவை வைத்து நம் விருப்பம்போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு நிலத்தினை மொத்தமாக வாங்கி மனைப்பிரிவுகளாக பிரித்து விற்கும்போது தனித்தனி பட்டா எண் கிடைக்காது. அதாவது மொத்தமாக ஒரே பட்டா எண்ணாகவே இருக்கும். பட்டா எண் மாறாது. அதற்கு பதிலாக சர்வே எண் உட்பிரிவுகளாக A, B, C,.. என்று பிரிந்து ஒவ்வொரு மனைப்பிரிவுற்கும் தனித்தனி உட்பிரிவுடன் கூடிய சர்வே எண் இருக்கும்.
பட்டாவின் பயன்கள். பட்டா எதற்காக தேவைப்படுகிறது?
நிலப்பதிவு செய்வதற்காக
ஒரு விவசாய நிலத்தினையோ, காலி இடத்தையோ அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்யவோ அல்லது வாங்குவதற்கோ பட்டா சிட்டா கண்டிப்பாக தேவைப்படுகிறது. பட்டா சிட்டாவை வைத்தே ஒரு நிலத்தை வாங்கவோ விற்பனை செய்யவோ முடியும். தமிழ் நாட்டில் நில உடைமைக்கான ஆவணமாக பட்டா சிட்டா உள்ளது.
கடன் பெறுவதற்கு மற்றும் இழப்பீடு பெறுவதற்காக
வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது. சொத்தின் உரிமை, சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள இடம் போன்றவற்றை கொண்டே கடன் பெறும் தகுதியை முடிவு செய்கிறார்கள். விவசாயம் நிலம் மற்றும் விவசாயாம் செய்து இயற்கை அழிவுகளால் பாதிப்பு அடைந்தாலோ, நிலத்தினை அரசு உபயோகத்திற்காக எடுத்துக்கொண்டாலோ அதற்கான இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் முக்கியமான ஆவணமாக தேவைப்படுகிறது
சட்டபூர்வமாக நிலத்தின் உரிமையை நிலைநாட்ட
நிலத்தின் மீது நில உரிமையாளரின் சட்ட பூர்வ உரிமையை நிரூபிக்க பட்டா சிட்டா முக்கிய ஆவணமாக இருக்கிறது. கட்டிடங்கள் போன்ற ஆக்கிரமிப்பை நிறுவி அவற்றை நிரூபிக்க எளிதாக இருக்கலாம். ஆனால் காலி நிலத்தையோ அல்லது விவசாய நிலத்தை அப்படி செய்யமிடியாது.
பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்
பட்டாவை பெறுவதற்கு கட்டணம் எவ்வளவு?
ஆன்லைனில் பட்டாவினை கட்டணம் ஏதுமின்றி இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் பட்டா மாறுதலுக்கு இசேவை மூலம் ரூ 60 கட்டணம் செழுத்த வேண்டும்.
ஆன்லைன் பட்டா பெறுவது எப்படி
பட்டாவினை ஆன்லைனில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1.சரியான அரசு இனையத்தளத்திற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html செல்லவேண்டும்.
2.பின்வரும் பக்கத்தில் உள்ள ‘பட்டா/சிட்டா விவரங்களை பார்வையிட‘ என்ற இணைப்பின் வழியாக சென்றால் , நிலப்பதிவேடு நில உரிமை(பட்டா/சிட்டா) விவரங்களை பார்வையிட என்ற பக்கம் தோன்றும்.


3.நில விவரங்களை பார்வையிடும் பக்கத்தில் மாவட்டம், வட்டம் மற்றும் நில வருவாய் கிராமம் ஆகியவற்றை மெனு மூலம் தேர்ந்தெடுக்கவும். இதில் பட்டா எண் அல்லது சர்வே நெம்பர் மற்றும் உட்பிரிவு போன்றவற்றை போன்றவற்றை உள்ளீடு செய்து பக்கத்தில் தெரியும் பாதுகாப்பு அங்கீகார மதிப்பை உள்ளீடு செய்து சமர்பிக்கவும் பட்டனை அழுத்தவும்.
உடனடியாக உங்களுக்குரிய பட்டா முழு விவரங்களுடன் தோன்றும். இதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். சேமித்துக் கொள்ளலாம்.
புதியதாக நிலம் வாங்கினால் ஆன்லைனிலேயே பட்டா மாறுதல் விண்ணப்பிக்கலாம்
- பட்டா சிட்டா ஆன்லைனில் பார்வையிட பிரிண்ட் செய்ய லிங்க்
- பட்டா மாறுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க்
- ஆன்லைனில் வின்னப்பித்து இருந்தால் பட்டா சிட்டா விவரங்களை குறிப்பு எண் கொண்டு ஆன்லைனில் சரிபார்க்க பட்டா நகலை பார்வையிட
பட்டா சிட்டா ஆன்லைனில் பார்க்க லிங்க்